Mini vic.gov.au

This is a low bandwidth version of vic.gov.au. Contents may not be up to date. © Copyright State Government of Victoria

கிண்டர் கிட்ஸ் (Kinder Kits) - தமிழ் (Tamil)

2025 -ஆம் ஆண்டு நிலவரப்படி, நிதியளிக்கப்பட்ட மூன்று வயது மழலையர் பள்ளி திட்டத்தில் சேரும் ஒவ்வொரு குழந்தையும் மழலையர் தொகுப்பு (Kinder Kit) பெறத் தகுதியுடையவர் ஆவார்.

குடும்பங்களுக்கான வழிகாட்டி

உங்கள் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பு (Kinder Kit) பற்றி

உங்கள் குழந்தையை விளையாட்டில் ஈடுபடுத்துவது அவர்களின் கற்றல் மற்றும் வளர்ச்சியை ஆதரிக்க ஒரு சிறந்த வழியாகும். பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அப்பயணத்தின் மிக முக்கியமானவர்களாகும்.

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்புகள் (Kinder Kits) புத்தகங்கள், கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்கள், அத்துடன் உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினர் வீட்டில் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்காகச் செய்யப்பட்ட செயல்பாடுகளால் நிரம்பியுள்ளன.

ஒவ்வொரு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பும் (Kinder Kit) குறிப்பாக மூன்று வயது குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளது.

Illustration of three children playing. One is reading a book, one is colouring in, one is holding animal finger puppets.

விக்டோரியன் ஆரம்ப ஆண்டுக் கற்றல் மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பு

ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்திற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உங்கள் குழந்தை வளர மற்றும் கற்றுக்கொள்ள உதவுகிறார்கள்.

மழலையர் பள்ளித் திட்டங்கள் குழந்தைகளின் கற்றல் மற்றும் வளர்ச்சியை வழிநடத்த விக்டோரியன் ஆரம்ப ஆண்டு கற்றல் மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பைப் (VEYLDF) பயன்படுத்துகின்றன.

உங்கள் ‘கிண்டர் கிட்’டில் (Kinder Kit) உள்ள அனைத்தும் VEYLDF இல் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளுடன் இணைகின்றன.

முதுகுப் பை (backpack)

‘கிண்டர் கிட்’ (Kinder Kit) முதுகுப் பைகளை (backpacks) பொருட்களை எடுத்துச் செல்லவும் விளையாடவும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தலாம்.

உங்கள் குழந்தை பையிலுள்ள அட்டையில் ஒரு படத்தை வரையலாம், இதனால் எந்த முதுகுப் பை தங்களுடையது என்பதை அவர்கள் அறிவார்கள்.

முதுகுப் பையை அவிழ்த்து, சொரசொரப்பான (felt) மேற்பரப்பை கற்பனை விளையாட்டுக்காகப் பயன்படுத்துவதற்கு ‘வெல்க்ரோ’ (Velcro) நாடாக்களை அடியில் ஒட்டவும்.

வாசித்தல்

ஒரு குடும்பமாக ஒன்றாக நேரத்தைச் செலவிட, வாசித்தல் ஒரு சிறந்த வழியாகும். எழுத்தறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மிக முக்கியமான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

உங்கள் குழந்தையுடன் வழக்கமான கதை நேரத்தைப் பகிர்ந்து கொள்வது அவர்களின் கற்பனை மற்றும் சொற்களஞ்சியத்தை வளர்க்க உதவுகிறது.

வரைதல் மற்றும் குறியீடு செய்தல்

வரைதல் மற்றும் குறியிடுதல் போன்றவை குழந்தைகள் தங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும் அனுமதிக்கிறது. காகிதத்தில் வண்ணக் கட்டிகளால் வரைந்து பரிசோதிப்பதன் மூலம், குழந்தைகள்:

ஆக்கபூர்வமான செயல்பாடுகள்

ஆக்கப்பூர்வமான விளையாட்டு உங்கள் குழந்தையின் 5 புலன்களையும் - பார்வை, வாசனை, கேட்டல், தொடுதல் மற்றும் சுவையுணர்வு ஆகியவற்றைத் தூண்டுகிறது. உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், கண்டறியவும், கற்றுக் கொள்ளவும் இது ஒரு சுவாரசியமான வழியாகும்.

வெளிப்புற விளையாட்டு

மேற்பார்வையுடன் கூடிய வெளிப்புற விளையாட்டு உங்கள் குழந்தையின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நல்வாழ்வின் ஒரு பெரிய பகுதியாகும்.

குழந்தைகள் செய்யக்கூடியவை:

பாத்திர நடிப்பு

கற்பனைக் கதைகளை நடித்துக் காட்டவும் மற்ற கதாபாத்திரங்களின் பாத்திரங்களை ஏற்கவும் பாத்திர நடிப்பு குழந்தைகளை ஊக்குவிக்கிறது.

முக்கியமான மொழித் திறன்கள் மற்றும் சமூகத் திறன்களைப் பயிற்சி செய்யக் குழந்தைகள் உயிர்த்துடிப்பான நாடகத்தைப் பயன்படுத்துகின்றனர், அதில் பின்வருவன அடங்கும்:

விளையாட்டுகள்

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விளையாடுவது உங்கள் குழந்தையின் சமூகத் திறன்களை வளர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.

எண்ணறிவு, மொழியறிவு, மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைக் கற்றுக்கொள்வற்கு விளையாட்டுகள் குழந்தைகளுக்கு உதவும்.

சமூகத்தை உருவாக்குதல்

விளையாட்டு என்பது குழந்தைகள் தங்களைப் பற்றியும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் எவ்வாறு கண்டுபிடித்துக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதாகும். குழந்தைகளுக்கு விளையாட்டும் கல்வியும் கைகோர்த்துச் செல்பவை. பன்முகத்தன்மை மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்த உங்கள் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பில் (Kinder Kit) உள்ள பொருட்கள் உதவுகின்றன.

அடையாளத்தை மதித்தல்

எல்லா கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள குழந்தைகளை ஊக்குவிப்பது என்பது, புரிதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பெருமை ஆகியவற்றை உருவாக்குகிறது. பழங்குடியினர் மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் கலாச்சாரங்களும், இங்கு விக்டோரியாவில், கூரி (Koorie) கலாச்சாரங்களும், இன்றும் உயிர்ப்புடன் செழித்து வருகின்றன. ‘கிட்ஸில்’ (Kits) படைப்பாசிரியர்களாகவும், கலைஞர்களாகவும் அவர்களைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

கூரி (Koorie) மரபுகள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றி உங்கள் குழந்தை மேலும் அறிய உதவும் சில செயல்பாடுகள் பின்வருமாறு:

ஆஸ்திரேலிய சைகை மொழியில் (Auslan) புத்தகங்கள்

‘ஆஸ்லான்’ (Auslan) என்பது விக்டோரியாவின் ஆரம்பகாலக் குழந்தைப் பருவ மொழித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் சைகை மொழியாகும். இந்தத் திட்டம் சில மழலையர் பள்ளிகளில் கிடைக்கிறது.

குழந்தைகள் இளம் வயதிலேயே வேறு மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் பல நன்மைகள் உள்ளன, அதில் பின்வருவன அடங்கும்:

குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்புகளில் (Kinder Kits) சேர்க்கப்பட்டுள்ள பல புத்தகங்களில் ‘ஆஸ்லான்’ (Auslan) மொழிபெயர்ப்புகள் உள்ளன.

குழந்தைப் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கூடுதல் ஆதரவு

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை விட வேறு எதுவும் முக்கியமில்லை. குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்று உங்கள் சேவை வழங்குநரிடம் கேளுங்கள்.

அனைத்துக் குழந்தைகளும் வெவ்வேறு வகையில் தங்களுக்கான சொந்த வேகத்தில் கற்றுக் கொள்கிறார்கள். உங்களுக்கு ஏதேனும் வருத்தங்கள் இருந்தால் உங்கள் ஆரம்பகாலக் குழந்தைப் பருவ ஆசிரியரிடம் பேசுங்கள்.

உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால், பின்வரும் வழிகளில் உதவி கிடைக்கும்:

ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியில் வாழ்க்கைத் தொழில்கள்

விக்டோரியாவின் வளர்ந்து வரும் மழலையர் பள்ளித் துறையில் ஒரு வாழ்க்கைத் தொழிலைத் தொடங்குவதைப் பற்றிக் கருத்தில் கொள்ளவும். ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்திற்கான ஆசிரியர் அல்லது கல்வியாளராக ஆவதற்கு உங்களுக்கு உதவிட, பின்வருவன உள்ளன:

Illustration of two children sitting on the floor playing with blocks while two adults talk, speech bubble from one adult with text

உங்கள் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் வை நன்கொடையாக வழங்குதல்

உங்கள் குழந்தை தங்களது ‘கிண்டர் கிட்’ (Kinder Kit) பொருட்களைப் பயன்படுத்தியபின், தயவுசெய்து அவற்றை பொறுப்புடன் அப்புறப்படுத்தவும்.

பொருட்கள் நல்ல நிலையில் இருந்தால், அவற்றை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென்பதைக் கருத்தில் கொள்ளவும். ‘நான் இதை ஒரு நண்பருக்குக் கொடுக்கலாமா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பதில் ஆம் என்றால், தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிப்பது பொருத்தமானது.

உங்கள் பொருட்கள் நன்கொடை அளிக்க ஏற்றதல்ல என்றால், முடிந்தவரை அவற்றை மறுசுழற்சி செய்யவும்.

கழிவுகளை முறையாகக் குறைத்து, அப்புறப்படுத்துவது என்பது தூய்மையான, பசுமையான விக்டோரியாவை உருவாக்க உதவுகிறது.

Education & training

Updated 14 February 2026



About the VIC Government

Grants and programs

Jobs and careers

Arts, culture and heritage

Business and the workplace

Communities

Education and training

Environment, water and energy

Finance and economy

Health and social support

Housing and property

Law and justice

Safety and emergencies

Science and technology

Sport and recreation

Traffic and transport

Working in the Victorian Government